top of page
  • Writer's pictureRaj

போலி முட்டைகள் அல்லது பிளாஸ்டிக் முட்டைகள் கண்டுபிடிப்பது எப்படி ?

செயற்கை மற்றும் உண்மையான முட்டைகளை இனம் காண்வது சற்று கடினமாக இருப்பினும். அதை அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.

Trisha marriage news

போலி முட்டைகள் அல்லது பிளாஸ்டிக் முட்டையை கண்டுபிடிப்பது எப்படி ?


முட்டையின் போலி நிலையை அறிய ஒருசில முறைகள் உள்ளன. போலி உணவுகள் சந்தையில் களமிறங்குவது ஒன்றும் புதிய செய்தி இல்லை. ஆனால் முட்டையில் கலப்படம் என்ற விஷயம் நாட்டில் உள்ள அனைவரையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. இந்த பதிவில் இதைப்பற்றிய முழுமையான தகவலை காண்போம். போலி முட்டைகள் மற்றும் உண்மையான முட்டைகளை எளிதாக தரம் பிரிக்க 8 சிறந்த வழிகள் உள்ளன:

இந்தியாவில் அதிக முட்டை உற்பத்தி செய்யும் மாநிலங்கள்


ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களும் நாட்டிலேயே அதிக முட்டை உற்பத்தி செய்யும் மாநிலங்கலாக உள்ளது. ஆனால் முட்டையை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ளும் / பயன்படுத்தும் நுகரிவோர் தெலுங்கானா மாநிலமத்தில் தான் உள்ளனர். ஒரு புள்ளி விவரத்தின்படி, தினமும் 75 லட்சம் முட்டைகள் தெலங்கானாவின் தலைநகரான ஹைதராபாத்துக்கு மட்டும் தேவைப்படுவதாக விளக்குகிறது.


நாளுக்கு நாள் எகிறி வரும் முட்டை விலையை போல அதன் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. போலி முட்டை / பிளாஸ்டிக் முட்டை வியாபாரமும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

சமீபத்தில் இலங்கையில் கூட போலியான செயற்கை முட்டைகள் புழக்கத்தில் உள்ளனவா என்று நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.


போலி உணவுகள் சந்தையில் களமிறங்குகிறது என்ற செய்தி, தற்போது இந்தியாவிலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. இது நாட்டில் உள்ள அனைவரையும் பீதியில் ஆழ்த்தும் செய்தி.


சமீபத்தில், கொல்கத்தா சந்தைகளில் பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்ட செயற்கை முட்டைகள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது.


முட்டை சமைத்தபோது பிளாஸ்டிக் வாசனையுடன் இருப்பதாக, குடிமைப்பொருள் மற்றும் நுகர்வோர் விவகாரத் துறைக்கு பெண் ஒருவர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலி முட்டை விற்பனை வெளிச்சத்துக்கு வந்தது.

போலி பிளாஸ்டிக் அரிசி இருப்பதாக பரப்பப்படும் பிரசாரம் போன்று இதுவும் பொய்யான செய்தி என்பதால் முட்டையை உட்கொள்வதில் மக்கள் அச்சப்பட வேண்டாம் என அதிகாரிகள் தெரிவித்தாலும், மக்கள் சற்று குழப்பத்திலேயே இருக்கிறார்கள்.


இலங்கையை பொறுத்தவரை போலியான செயற்கை முட்டைகளை விற்பனை செய்யப்படவில்லை என்றும் ஆனால் இதுபோன்ற தவறுகள் நடந்தால், 1977 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தெரியப்படுத்துமாறும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


ஒருவேளை இது உண்மையாக இருந்தால் இது உணவு ஊழல் என்று கூறலாம். இது நுகர்வோருக்கு கடுமையான உடல்நல அபாயங்களை ஏற்படுத்துகிறது.


எனவே, பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட செயற்கை முட்டைகளை எவ்வாறு அடையாளம் காண்பது என்பதை ஒருவர் அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.

போலி முட்டைகள் மற்றும் உண்மையான முட்டைகளை நீங்கள் எளிதாக தரம் பிரிக்க சில வழிகள் உள்ளன:

  1. போலி முட்டையின் வெள்ளைக்கருவும் மஞ்சள் கருவும், உண்மையான முட்டைகளைப் போலல்லாமல், உடைத்தபின் ஒன்றாகக் கலந்துவிடும்.

  2. போலி முட்டைகள் உண்மையான முட்டைகளை விட சற்று பளபளப்பான, கடினமான ஓடுகளைக் கொண்டிருக்கும்.

  3. போலி முட்டைகள் ஓடுகளுக்குள் ரப்பர் போன்ற உறையையும் கொண்டிருக்கும்.

  4. நீங்கள் ஒரு போலி முட்டையை அசைக்கும்போது மெல்லிய சத்தம் கேட்கும்.

  5. உண்மையான முட்டைகள் பச்சை இறைச்சி போல வாசனை வீசும் அதே சமயம் போலி முட்டைகள் வாசனையே இருக்காது.

  6. போலி முட்டையை தீக்கு அருகில் கொண்டு சென்றால், பிளாஸ்டிக் முட்டையாக இருந்தால் அதிலிருந்து பிளாஸ்டிக் எரியும் வாசனை வரும், மேலும் அதன் ஓட்டில் தீப்பற்றிவிடும்.

  7. உண்மையான முட்டையை லேசாக உடைப்பது போலி முட்டையுடன் ஒப்பிடும் போது மிருதுவான ஒலியை உருவாக்கும்.

  8. கடைசியாக, போலி முட்டைகள் உண்மையான முட்டைகளைப் போல எறும்புகள் மற்றும் ஈக்கள் போன்ற பூச்சிகளை ஈர்க்காது.

bottom of page