top of page
  • Writer's pictureRaj

மது அருந்திய பயணியை ‘குடிகாரர்’ என்று சொல்லக்கூடாது | Air India Alcohol Policy 2023 rules in Tamil

Air India Alcohol Policy 2023 rules Declared: மது அருந்தியவர்கள் குடிகாரர்கள் இல்லை அப்படியே தோசையை திருப்பிப்போட்ட ஏர் இந்தியா நிறுவனம். அண்மையில் மது அருந்திய பயணியை ‘குடிகாரர்’ என்று சொல்லக்கூடாது என விமானப் பணிக்குழுவிற்கு ஏர் இந்தியா அறிவிப்பு ஒன்றை கொடுக்கும் வகையில் ஒரு செய்தியை வெளியிட்டது.

மது அருந்திய பயணியை ‘குடிகாரர்’ என்று சொல்லக்கூடாது | Air India Alcohol Policy 2023 rules in Tamil

Air India Tamil


சமீபத்தில் ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த நபர் மதுபோதையில் சக பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் சர்ச்சை கிளப்பியது. அந்த விஷயம் முடிந்து சில நாட்களே ஆன நிலையில் தற்போது மற்றொரு விஷயத்தை ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஏர் இந்தியா விமானத்திலும் ஆண் பயணி ஒருவர் காலியாக இருந்த பெண் பயணியின் இருக்கையில் சிறுநீர் கழித்தது தெரியவந்தது. இதுதொடர்பான புகார்களின் அடிப்படையில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் 40 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.


இந்நிலையில், தனது மது விநியோகக் கொள்கையை ஏர் இந்தியா நிறுவனம் மாற்றி அமைத்துள்ளது. ஜனவரி 19 முதல் இந்தக் கொள்கை மாற்றங்கள் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி, ஏர் இந்தியா தனது விமானப் பயணியாளர்களுக்கு அளித்துள்ள வழிகாட்டுதல்களில், பயணிகளுக்கு அளவுக்கு அதிகமாக மது வழங்கக் கூடாது என்றும் அப்படி அளவுக்கு அதிகமாக மது அருந்த விரும்பும் பயணிக்கு மது வழங்க மறுக்கலாம் என்றும் கூறியுள்ளது.

சுமார் 2 லட்சம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்

Air India Alcohol Rules

விமானத்தில் பயணிகள் சொந்தமாக மதுபானங்களை எடுத்து வந்து குடிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மது அருந்திய பயணிகளிடம் பேசும்போது பணிவாக நடந்துகொள்ள வேண்டும், ‘குடிகாரர்’ என்ற சொல்லைக் ஒருபோதும் பயன்படுத்த கூடாது என்று பல்வேறு வழிகாட்டுதல்களை அளித்துள்ளது. மது அருந்தும் பயணிகளிடம் பேசிப் புரிய வைப்பது மட்டுமின்றி அவர்களைத் தொடர்ந்து கண்காணித்து வருவதும் அவசியம் என்றும் ஏர் இந்தியா கூறியுள்ளது.

bottom of page