top of page
  • 600003

தமிழக விவசாயிகளுக்கு ரூபாய் 10,000 மானியம் | agriculture scheme 2023 in tamilnadu

Agriculture scheme 2023 in tamilnadu ?

Rs.10000 Free to Install Agriculture pump set in Tamilnadu

Tamilnadu Government latest announcement, தமிழக விவசாயிகளுக்கு ரூபாய் 10,000 மானியம் வழங்கும் திட்டம். முக்கிய அறிவிப்பு வெளியிட்ட அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம். தமிழக விவசாயிகள் பலரும் தற்போது பழைய, திறன் குறைந்த மின் மோட்டார் பம்புசெட்களை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மின்சாரப் பயன்பாடு அதிகமாவதோடு, பாசன நேரமும் அதிகரிக்கிறது. இவ்வாறு சாகுபடிக்கான செலவு அதிகரித்து வரும் நிலையில் சிறு, குறு விவசாயிகள் இத்தகைய பழைய திறன் குறைந்த பம்பு செட்டுகளை மாற்றுவதற்கு தயங்குகிறார்கள்.

Free Money to Install Pump Set by uzhavan seyali


விவசாயிகளின் நலனுக்காக, புதிய மின்மோட்டார் பம்புசெட்டுகளை வாங்குவதற்கு மானியம் வேளாண்மைப் பொறியியல் துறையால் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு இரண்டாயிரத்து இருபத்தி இரண்டு 23 வேளாண் நிதிநிலை அறிக்கையில், அதிகபட்சம் ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு, புதிய மின்மோட்டார் பம்பு செட்டுகள் வாங்கவும், திறன் குறைந்த பழைய மின்மோட்டார் பம்பு செட்டுகளை மாற்றி புதிய மின் மோட்டார் பம்பு செட்டுகள் அமைக்கவும் ஒரு மின்மோட்டார் பம்பு செட்டுக்கு ரூபாய் 10,000 வீதம் 5,000 விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதற்காக ரூபாய் 5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

500 rupee ban news RBI 2023 Real or Fake


இத்திட்டத்தில் சிறு, குறு, ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகள், தங்களது பழைய மின்மோட்டார் பம்புசெட்டுகளை மாற்ற விரும்பினாலும், புதிதாக ஆழ்துளைக் கிணறு அல்லது குழாய்க் கிணறு அல்லது திறந்தவெளி கிணறு அமைத்து,


சொந்தமாக மின் இணைப்பு பெற்ற விவசாயிகளும், இத்திட்டத்தில் பயன்பெறலாம். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலமாகவோ, https://mis.aed.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ விண்ணப்பித்து, தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.


Documents required to apply this scheme


கூடுதல் விபரங்களுக்கு உங்கள் வட்டார வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலர்களை நேரில் தொடர்பு கொள்ளலாம். இதற்கு தேவையான ஆவணங்கள் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதார் அட்டை, சிறு, குறு விவசாயிக்கான சான்றிதழ், புகைப்படம், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம், ஆதி திராவிட, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவராயிருப்பின் சாதிச் சான்றிதழ், சிட்டா, கிணறு விபரத்துடன் கூடிய அடங்கல், மின் இணைப்பு சான்றிதழ், புதிய மின்மோட்டார் வாங்கியதற்கான விலைப்பட்டியல் போன்ற ஆவணங்களுடன் உழவன் செயலி மூலமாக அல்லது இணையதளம் மூலமாக விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.


தினசரி வேலைவாய்ப்பு தகவலை பெற Telegram குரூப்பில் சேருங்கள்


bottom of page