top of page
  • Writer's pictureRaj

இந்தியாவின் முதல் மின்சார டபுள் டக்கர் பேருந்து அறிமுகம் | India's Digitalized Double Decker AC Bus

India's First Electric Double Decker Bus 2023: இந்தியாவின் முதல் மின்சார டபுள் டக்கர் பேருந்து அறிமுகம்.

இந்தியாவின் முதல் மின்சார டபுள் டக்கர் பேருந்து அறிமுகம் | India's Digitalized Double Decker AC Bus

அதில் என்னென்ன வசதிகள் உள்ளது, எந்தெந்த வழித்தடத்தில் இயக்கப்படுகிறது, மற்றும் அதில் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதை இந்த பதிவில் முழுமையாக காண்போம். இந்தியாவின் மும்பையில் தான் இந்த முதல் மின்சார டபுள் டக்கர் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் மின்சார டபுள் டக்கர் பேருந்து இன்று மும்பை வீதிகளில் அலங்காரமாக வலம் வந்து கொண்டிருக்கிறது.


Double Decker Bus In India


இந்த மின்சார பேருந்து சத்திரபதி சிவாஜி மஹாராஜ் டெர்மினல் மற்றும் நேஷனல் சென்டர் ஆஃப் பெர்ஃபார்மிங் ஆட்ஸ் ஆகியவற்றுக்கு இடையே இயக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய போக்குவரத்து பேருந்து பயணிகளை மலிவான கட்டணத்தில் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் பயணம் செய்யலாம். ஏசி டபுள் டக்கர் எலக்ட்ரிக் பஸ் வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகளுக்காக பயன்படுத்தப்படும். இதற்கான கட்டணம் தினசரி பயண டிக்கெட்டில் இருந்து வேறுபட்டதாக இருக்கும். இந்த பேருந்துகளில் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது. சாதாரண பேருந்துகளை போல் அல்லாமல் இந்த பேருந்துகளில் கண்டக்டர்களும் கிடையாது.

பயனர் ஸலோ ஸ்மார்ட் கார்டை வாங்க வேண்டும் அல்லது ஸலோ செயலியை பதிவிறக்கம் செய்து டிக்கெட்களை பெற வேண்டும். பயணத்தைத் தேர்ந்தெடுத்து, நுழைவு கதவில் உள்ள டிக்கெட் பதியும் இயந்திரத்தில் மொபைல் மூலம் டிக்கெட் எடுக்க வேண்டும். அதேபோல் பயணத்தை முடிக்கும் போது மீண்டும் ஒரு முறை மொபைல் மூலம் உங்கள் டிக்கெட்டை கதவின் அருகே காட்ட வேண்டும். இ வாலெட் UPI அல்லது ஆப்ஸுடன் இணைக்கப்பட்ட ஆன்லைன் பேய்மெண்ட் மூலம் ஆன்லைனில் பணம் கழிக்கப்படும். இந்த டபுள் டக்கர் பேருந்துகளில் 73 இருக்கைகள் உள்ளன. மேலும் இதில் CCTV கேமராக்கள் மற்றும் தானியங்கி கதவுகள் உள்ளன, மேலும் 80 நிமிடங்களில் சார்ஜ் செய்ய முடியும் என கூறப்படுகிறது. தற்போது, போக்குவரத்து நிறுவனம் பல்வேறு அளவுகளில் 45 மின்சார ஏசி பேருந்துகளைக் கொண்டுள்ளது, மேலும் இந்த ஆண்டு மேலும் 100 பேருந்துகள் வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் முதல் மின்சார டபுள் டக்கர் பேருந்து - 2023

Bus Ticket Book Online App

ஏ 115 வழித்தடத்தில் 5 கிலோ மீட்டர் பயணத்திற்கு ரூபாய் 6. ஹெரிடேஜ் டூரின் மேல்தளத்தின் விலை ரூபாய் 150, கீழ்தளம் ரூபாய் 75 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. CSMT கேட்வே ஆஃப் இந்தியா, குர்லா முதல் BKC மற்றும் பாந்த்ரா ஈஸ்ட் வரை இந்த பேருந்துகளில் பயணம் செய்யலாம். சி எஸ் எம் டியில் இருந்து புறப்படும் முதல் பேருந்து காலை எட்டு 45 மணிக்கும் கடைசி பேருந்துகள் மாலை 4 மணிக்கும் இயக்கப்படுகிறது. முதல் பேருந்து N C P ஏவிலிருந்து காலை 9 மணி 2 நிமிடத்தில் புறப்பட்டு மாலை நான்கு 20 மணிக்கு திரும்பும். அதேபோல் கடைசி பேருந்து மதியம் பன்னிரண்டு 40 மணிக்கும் இரவு 8 மணிக்கும் புறப்படும். இதுபோன்ற செய்திகளை பெற நமது மெய் தமிழன் சேனலை பின்தொடரவும்.

bottom of page