top of page
  • Writer's pictureRaj

ஆதார் புதிய விதிமுறை வந்துள்ளது aadhaar link and update news

aadhaar card new update

ஆதார் புதிய விதிமுறை வந்துள்ளது. அனைவரும் முக்கியம் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயம். இந்த காலகட்டத்தில் ஆதார் இல்லாமல் நாம் ஒரு அரசு திட்டத்தையும் பெற முடிவதில்லை. இதை தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டாயம் இதை செய்ய வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது. ஆதார் கார்டு உங்களுக்கு வழங்கப்பட்ட தேதியில் இருந்து, ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை உங்கள் ஆதார் தகவல்களைப் புதுப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

aadhar card update


ஆதார் என்பது வெறும் ஒரு நாட்டின் குடிமகனின் அடையாளமாக எண்ணிவிட முடியாது. பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை அனைவருமே ஆதார் எண் வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயம். மேலும் நாடு முழுவதுமே இது தற்போது அமலில் உள்ளது. ஆதார் எண்ணை முதலில் வாங்குவது சற்று கடினமாக இருந்தது. பின் நாட்கள் செல்ல செல்ல தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி இந்தியாவின் மூலை முடுக்குகளில் கூட ஆதார் சேவை மையம் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.


government news in tamil


கடந்த சில நாட்களுக்கு முன், ஆதார் விதிமுறைகளில் அரசாங்கம் பல்வேறு புதிய மாற்றங்களை அமல்படுத்தியது. இந்த புதிய அறிவிப்பின் படி ஆதார் உங்களுக்கு வழங்கப்பட்ட தேதியில் இருந்து, ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை உங்கள் ஆதார் தகவல்களைப் புதுப்பிக்க வேண்டும். இதன் மூலம் பொது அடையாள தரவு சேகரிப்பு மையத்தில் உங்களைப் பற்றிய விவரங்கள் சரியானதாகவும் துல்லியமானதாகவும் இருக்கும் என்பது உறுதி செய்யப்படுகிறது. முக்கியமாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள், ஆதார் என்ரோல் மென்ட் தேதியில் இருந்து ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, உங்களுடைய அப்போதைய அடையாள சான்று, இருப்பிடச் சான்று உள்ளிட்ட உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

news tamilnadu


ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டும் என்பது கட்டாயமில்லை என்றாலும், குறிப்பிட்ட கால இடைவெளியில் உரிய ஆவணங்களை புதுபிப்பது பாதுகாப்பானது என்று கூறியுள்ளது. அடையாளச் சான்றில் உங்களுடைய பெயர் மற்றும் புகைப்படம் தெளிவாக இருக்க வேண்டும். வழக்கமாக அடையாள சான்றாக நீங்கள் பயன்படுத்தும் பாஸ்போர்ட், பான் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்டவற்றை நீங்கள் சமர்ப்பித்து உங்களுடைய ஆதார் அட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம். நீங்கள் உங்களுடைய முகவரியையும் சுய சேவை புதுப்பிப்பு போர்ட்டலில் அப்டேட் செய்து கொள்ளலாம். இதில் நீங்கள் உங்களுடைய பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், மொபைல் எண், மின்னஞ்சல் மற்றும் உங்களின் வசிப்பிடம் இதை மட்டும் புதுப்பிக்கலாம். உங்களுடைய ரேகை, ஐரிஸ், மற்றும் புகைப்படம் போன்ற பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிப்பதற்கு நீங்கள் ஆதார் சேவை மையத்தை அணுக வேண்டும். இதுபோன்ற முக்கியமான தகவல்களை பெற நமது மெய் தமிழன் சேனலை பின்தொடரவும்.

bottom of page