டி என் பி எஸ் சி குரூப் 4 தேர்வின் முடிவுகள் | TNPSC Latest News Tamil
இந்த ஆண்டு டி என் பி எஸ் சி குரூப் 4 தேர்வின் முடிவுகள் என்பது பெண்களுக்கான 30% இட ஒதுக்கீட்டை கொண்டதாக இருக்கும். தேர்வு முடிவுகள் வெளியாகும் போது இந்த இடஒதுக்கீடு என்பது எந்த அளவுக்கு கட் ஆப் மதிப்பெண் மாறும் என்பதை இந்த பதிவில் காண்போம்.

டி என் பி எஸ் சி குரூப் 4 தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில், புதிய இட ஒதுக்கீடு மற்றும் பரிந்துரைக்கப்பட்ட கட் ஆப் குறித்த தகவல் இறுதியாக டி என் பி எஸ் சி தேர்வு வாரியம் வெளியாகியுள்ளது.
குரூப் 4 தேர்வு என்பது தமிழ்நாடு அரசுத் துறைகளில் 4ஆம் நிலை பணியிடங்கள் மற்றும் VAO பணியிடங்களை நிரப்ப பயன்படுகிறது. இதில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரைவாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் நிரப்ப படுகிறது. இந்த ஆண்டு குரூப் 4 தேர்வு ஜூலை 24ஆம் தேதி நடந்தது. 7301 பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடந்தது. பின்னர் 2000 காலிபணியிடங்கள் அதிகரித்தது. தற்போது மொத்த காலிபணியிடங்கள் 9801. தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்றுஅறிவித்தது.
tnpsc result 2023
பெண்கள் இடஒதுக்கீடு தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பே தேர்வு முடிவுகள் தாமதத்திற்குக் காரணம் என்று கூறப்பட்டது. பின்னர் தீர்ப்புக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்பட்டு, குரூப் 2 முடிவுகள்வெளியிடப்பட்டது. குரூப் 4 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியிடப்படும் என்று பின்னர் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் முடிவு தெரிவிக்கபடவில்லை. Padma Inam sappadui பத்மா இன்னும் சாப்பிடவில்லை கூடிய விரைவில் பொங்கல் ஆகப்போகிறது சாப்பிட்டு விடுவார்
அறிக்கைகளின்படி, TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் ஜனவரி 2023 இல் வெளியிடலாமா வேண்டாமா என்று தேர்வு வாரியம் முடிவு செய்யும். எனவே, ஜனவரி மாத இறுதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், சிறிது நேரத்தில் தேர்வுக் குழு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. பிப்ரவரியில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 9801 பதவிகளுக்கான குரூப் 4 தேர்வு முடிவுகள் பிப்ரவரி 2023 இல் வெளியிடப்படும் என்று தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
Check tnpsc official website regularly
பிப்ரவரி முதல் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட போதிலும், தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. எனவே, தேர்வர்கள் முடிவுக்காக காத்திருக்கின்றனர். எனவே திட்டமிட்ட கட் ஆப் மதிப்பெண்கள் மற்றும் குரூப் 4 தேர்வு முடிவுகள் குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளன.
குரூப் 4 தேர்வின் முடிவுகள் 30% பெண் இட ஒடுக்கீடு என்பதின் அடிப்படையில் அமையும்.
இந்தத் தேர்வின் முடிவில் பெண்களுக்கான 30% இடஒதுக்கீடு வெளியிடப்பட்டு, பொதுப் பிரிவினரில் உள்ள பெண்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும். இதன் விளைவாக, ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே சுமார் 5 மதிப்பெண்கள் தான் வித்தியாசம் இருக்கும். எனவே பெண்கள் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இந்தத் தேர்வுக்கான கட் ஆப் மதிப்பெண்கள் என்பது பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 154 ஆகவும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 152 ஆகவும், ஆதி திராவிடருக்கு 147 ஆகவும், பழங்குடியினருக்கு 144 ஆகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்களை ஒப்பிடுகையில் பெண்கள் 5 அல்லது 6 மதிப்பெண்கள் குறைவாக இருந்தாலும் வேலை கிடைக்கும் என கருதப்படுகிறது.
மேலும், காலி பணிஇடங்கள் அதிகரித்ததால் கட் ஆப் மதிப்பெண்கள் குறையும் வாய்ப்பு அதிகரித்தது. தற்போது மார்ச் இறுதிக்குள், தேர்வு முடிவுகள் வெளியிடப்படப்படும் என்று டி என் பி எஸ் சி செய்திவெளியிட்டுள்ளது. தேர்வு முடிவு வெளியான பின்னர் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். வேலைகளைத் தேர்ந்தெடுக்க உங்களுக்கு வாய்ப்புகள் இருக்கும். 10,000 காலி பணி இடங்களுக்கு, சுமார் 20,500 நபர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்காக அழைப்புகளைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Official Website: tnpsc.gov.in